யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
யாழ். நகர பகுதி பாடசாலைகள் முன்பாக நேற்று (16.05.2025) மதியம் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வவுனியா
முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வவுனியாவில் இடம்பெற்றது.
முன்னம்பொடிய்வேட்டை பகுதியில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரியும், வரலாற்று நினைவுகளை எச்சரிக்கையாக சுமக்கும் அரசியல் செயற்பாடாகவும் அமைந்தது.
தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான நேற்று வற்றாப்பளை இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை பாடசாலை சந்தியில் வைத்து இறுதி உயிரை காப்பாற்ற உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியானது வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




