குச்சவெளி - வேலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான வலையொலியாக மாறியுள்ளன.
கஞ்சி வழங்கல்
அந்தவகையில், நேற்று (16.05.2025) திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி வேலூர் பகுதியில், மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்வில், காணாமல் போனோரின் உறவுகள், கிராமப்புற மக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றி பேசினர்.
குறித்த நிகழ்வு, சமூக நினைவாற்றலை பாதுகாத்து, இனநீக்கம், உயிரிழப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் எதிர்வினையாகவும் அமைந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


