துணவியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு வட்டுக்கோட்டை துணவியில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் பொதுசுடரேற்றபட்டு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது.
துண்டுபிரசுரம் விநியோகம்
இதனைத்தொடர்ந்து வட்டுக்கோட்டையின் பல பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்ட மக்களால் அஞ்சலி செலுத்தபட்டது.
இதனையடுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் விநியோகிக்கபட்டது.
குறித்த நினைவேந்தலில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தன், சிறி ஜீவா ,மகளீர் அணி செயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி ,ஜனா சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஈழ விடுதலை இயக்கத்தின் நினைவேந்தல்
மேலும், 15 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட பணிமனையில் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸினால் பொதுச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.
கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், முன்னாள் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஸ் முன்னாள் யாழ்ப்பாண மாநகர பிரதி மேயர் ஈசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் போர்க்களத்தில் இருந்து மீண்டு வந்த போரின் சாட்சியமான சபா குகதாஸ் நினைவுரை ஆற்றினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |