வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மகளிர் அணி சாதனை
வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனைகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தப் போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் வட மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளன.
வெற்றி பெற்ற பெண்கள் அணி
போட்டியின் முடிவில், முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி பதக்க எண்ணிக்கையின் அடிப்படையில் முதலிடத்தைப் பெற்று வட மாகாண சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை கைப்பற்றி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
ஆண்கள் பிரிவில் வவுனியா மாவட்டம் முதலிடத்தையும், முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட அணியில் புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, வள்ளிபுனம், கைவேலி, கள்ளப்பாடு, ஒட்டுசுட்டான், தண்ணீரூற்று, முள்ளியவளை, மாங்குளம், பாலிநகர், கொல்லவிளான்குளம், அம்பாள்புரம் மற்றும் வினாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் இணைந்து மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் இந்த வெற்றிக்கு விளையாட்டு ஆர்வலர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய மோசடி! விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்





1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri