தனிமைப்படுத்தல் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக செயற்பட்ட முல்லைத்தீவு பெண் கைது
தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயற்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வரும் பெண்களுக்காக வியங்கொட நய்வல பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த ஏனைய பெண்களின் தகவல்களை திரட்டி சந்தேகத்திற்கு இடமான முறையில் செயற்பட்ட பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் கடந்த 2019ம் ஆண்டு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி போலிப் பெயரைப் பயன்படுத்தி சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த பெண் அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
