முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி
பாப்பரசர் பிரான்ஸிஸின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே இறுதி யுத்தத்தில் உயர்நீத்த மக்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுதியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் நேற்று(27.07.2023) இடம்பெற்ற தரிசிப்பின் பின்னரே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுதியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
மோட்டார் வாகன வரவேற்பு
முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரதிநிதிக்கு மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் மோட்டார் வாகன வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுனாமி நினைவாலய தரிசிப்பிலும் புனித இராயப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற நற்கருணை ஆசீர்வாதத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
