முல்லைத்தீவில் இரண்டு சிறுமிகளை காணவில்லை : பொலிஸார் தீவிர விசாரணை
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் நேற்று (16) மாலை கல்வி கற்பதற்காக சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுமாத்தளன் பகுதியினை சேர்ந்த 14 மற்றும் 15 அகவையுடைய இரு பாடசாலை சிறுமிகள் நேற்று மாலை வீட்டில் இருந்து அம்பலவன் பொக்கணைப்பகுதியில் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார்கள்.
ஆனால் குறித்த இரு சிறுமிகளும் மாலைநேர கல்விக்கும் செல்லவில்லை என தெரியவந்துள்ளதை தொடர்ந்து பெற்றோரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், காணாமல் போன சிறுமிகள் தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்காத நிலையில் கிராமத்தவர்களும் சிறுமிகளை தேடும் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு