முல்லைத்தீவு -திம்பிலி கோவிட் சிகிச்சை நிலையம் இடம்மாற்றம்
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட திம்பிலி கோவிட் சிகிச்சை நிலையம் இன்று இடம் மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திம்பிலி கோவிட் சிகிச்சை நிலையம் மூடப்பட்டு அங்குள்ள பொருட்கள் அனைத்தும் முல்லைத்தீவு மாவட்ட எல்லை -முறுகண்டி பகுதி கோவிட் சிகிச்சை நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்த போது திம்பிலி கோவிட் சிகிச்சை நிலையம் படையினரால் அமைக்கப்பட்டு கோவிட் தொற்றாளர் கண்காணிப்பட்டனர்.
இந்த நிலையில் முல்லைத்தீவு எல்லைப் பகுதியில்A9 யாழ்ப்பாணம்- கண்டிவீதி முறுகண்டிப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு திம்பிலி கோவிட் சிகிச்சை நிலையம் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முறுகண்டிப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை
நிலையத்தில் தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 157 கோவிட்
தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam