முல்லைத்தீவு கடலில் மாயமான இளைஞன்(Video)
முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்க சென்ற இளைஞன் ஒருவர் நீர் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை (20.11.2022) இடம்பெற்றுள்ளது.
சம்பவம்
05 ஆம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினை சேர்ந்த 26 அகவையுடைய
செ.நிசாந்தன் என்ற இளைஞனே கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
சடலத்தினை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வறுமை

இரணைப்பாலை பகுதியினை சேர்ந்த இளைஞன் குடும்ப வறுமை காரணமாக உணவுக்காக ஏரல் எடுக்க சென்றுள்ளார்.
சாலை கடல் நீர் ஏரிக்கு அருகில் இராணுவ காவலரண் ஒன்று காணப்படும் நிலையில் ஏரியின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்க கடக்க முற்பட்டுள்ளார்.


இதன்போது ஏரியின் நீர் ஒட்டத்தில் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
தயார் மற்றும் பெரியம்மா ஆகியோரும் ஏரல் எடுக்க சென்ற நிலையில் அவர்களின்
கண்முன்னே இளைஞன் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri