திடீரென தாழிறங்கிய வீதி! : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை (Photos)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் முதன்மையான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில் ஒரு பகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் இவ் வீதியினை பயன்படுத்தும் சாரதிகள், கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்அவதானமாக பயணிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நீண்டகாலமாக குறித்த பாலம் புனரமைக்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பாலத்தினை புனரமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
