வட்டுவாகல் பாலத்தடியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் நடத்திவரும் நிலையில், இன்று(08.05.2025) கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அதிகளவான பொலிஸார்
குறித்த போராட்டமானது, வட்டுவாகல் பாலம் ஊடாக பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு வட்டுவாகல் பகுதியில் இறுதியாக கையளிக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக வரை சென்று போராட்டம் நிறைவடைந்திருந்தது.
போராட்டத்தின் போது சர்வதேசமே பதில் சொல், சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன?, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம், கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம்! எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும், தமிழரை கடத்தாதே! இனவழிப்பு செய்யாதே! உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன கல்விக்கூடமா? எமது நாட்டில் நாம்வாழ உரிமையில்லையா? உலகமெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளிலும் தெருவில் கிடந்து அழவைத்திருக்கிறது அரசு , போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, போராட்டத்தின் போது வட்டுவாகல் விகாரைக்கு செல்லும் வழியில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபட்டடிருந்தமையும் குறிப்பிடதக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan