தாயிற்கு எமனாக வந்த மகன் - தென்னிலங்கையில் பெரும் சோகம்
கொழும்பின் புறநகர் பகுதியான கொஹுவல பகுதியில் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமனாராம வீதியில் நேற்றையதினம் மகனின் காரில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் 59 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென பின்னோக்கி நகர்ந்தமையினால் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த தாய் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.