முல்லைத்தீவு மாவட்ட செயலகம், நீதிமன்ற வளாகங்களில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! (Photos)
வட மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற நீதி அமைச்சின் நடமாடும் சேவை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந் நிலையில், இன்று காலை 9.30மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடம் திறந்து வைக்கப்பட உள்ளதோடு அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஓ எம் பி அலுவலகம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடச்சியாக 1786 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகம் மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றம் முல்லைத்தீவு நகர் பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு புலனாய்வாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.





பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri