இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைப்பு
சமூக செயற்பாட்டாளரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரமுகருமாகிய அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியனை விசாரணையொன்றுக்கு வருகைத்தருமாறு தொலைபேசி ஊடாக முல்லைத்தீவு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
02.03.2021 ம் திகதி முல்லைத்தீவு ,கள்ளப்பாடு தெற்கு கண்ணகியம்மன் மீனவ சங்கத்தை சேர்ந்த மீனவர்களை மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும், படகுகளையும்,இயந்திரங்களையும், வலைகளையும் தான் ஏற்றி செல்வதாகவும் அச்சுறுத்திய கடற்றொழில் பரிசோதகர் தனபாலனிடம் மீனவர்களுக்காக போராடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்த நிலையில் 03.03.2021 அன்று அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடற்றொழில் பரிசோதகர் தனபாலன் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
அது தொடர்பாக வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளவும், விசாரணையொன்றை மேற்கொள்ளவும் 06.03.2021(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளரும், இலங்கைத் தமிழரசுக்கட்சி பிரமுகருமாகிய அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் கருத்து தெரிவிக்கையில்,
மீனவர்களை மீன்பிடிக்க செல்லக்கூடாது என தெரிவித்த போது அதை எழுத்து மூலம் கோரியது குற்றமா..?கபடத்தனமான கடற்கரையை அளவீடு செய்வதை நிறுத்த கோரியது குற்றமா..? பிரதேச செயலகத்தின் காணிப்பிரிவு, நிலவளவை திணைக்களம் நீரியல் திணைக்கள உயர் அதிகாரிகள் இன்றி அவர்களது அனுமதி இன்றி கடற்றொழில் பரிசோதகர் தனபாலன்,முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர் ஜோன்சன் ஆகியோர் அளவீடு செய்ய அதற்கான அனுமதி கடிதம் உண்டா என வினவியது குற்றமா...?
கடற்கரையை அளவீடு செய்ய அனுமதி கொடுத்தது யார் என வினவியது குற்றமா..?அல்லது மீனவ சமுதாயத்துக்கு குரல் கொடுத்தது குற்றமா ..?என கேள்வி எழுப்பியதுடன், என் மீதும் ,மக்கள் மீதும் போலியான வழக்குகளை பதிவு செய்து அடக்க நினைத்தாலும் ,அதையும் உடைத்தெறிந்து மக்களுடைய உரிமைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்போம். என் மேல் சுமத்தப்பட்டது பொய் குற்றசாட்டு என்பதை நீதி தேவதையின் முன் நிரூபிப்போம். மக்கள் பணி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.





நிலாவின் அப்பா சோழனிடம் போட்ட சவால், குடும்பம் உடைந்துவிடுமா.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
