பாரிய குளம் இருந்தும் நீரின்றி அவதியுறும் முல்லைத்தீவு மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்துஐயன்கட்டு பிரதேசத்தில் பாரிய குளம் மற்றும் குளத்தில் போதிய நீர் இருந்தும் நீரை பெற்றுக்கொள்ளமுடியாமல் சிரமப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முன்னைய காலங்களை விட இந்த வருடம் குளம் முழுதாக நிரம்பி குளத்தில் தேவையான நீர் காணப்படுகின்ற போதும் உரிய வகையில் தமக்கான நீர் விநியோகம் இடம்பெறாமையால் வான் பயிர்கள் அனைத்தும் அழிவடைவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், மக்கள் தமக்கான நீரை பெற்று தருமாறு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ள பின்னணியிலும் இதற்கான முடிவுகள் எட்டப்படாத நிலையே காணப்படுகின்றது.
எட்டப்படாத தீர்வு
அத்துடன், தங்களுடைய கிணற்றில் குடிநீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தமக்கு நீரை திறந்து தருவதற்குரிய அதிகாரிகளை அனுகியும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இதனையடுத்து, மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவ மோகன் அதிகாரிகளோடு கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீர்பாசன பொறியியலாளர் மற்றும் முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் குறித்த பகுதிக்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களும் குளபகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியுளட்ளனர்.
இதன்போது மக்கள் தமக்கு உரிய நீரினை திறந்து விடாமை காரணமாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பில் இதன்போது கருத்து தெரிவித்தனர்.
மேலும், பிரதான வாய்க்கால்களில் நீர் திறந்து விடப்பட்டிருக்கின்ற போதும் கிளை வாய்க்கால்களில் நீர் திறக்காமல் இருப்பதால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |