கொட்டியா என கூறி விரட்டினார்கள்! யுத்தத்தின் வடுவை சுமந்து வாழும் முதியவரின் பரிதாப நிலை (Video)
யுத்தம் என்பதை நாம் கடந்து வந்துள்ள போதும் யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்கள் இதுவரையில் முற்றாக மாறிவிடவில்லை.
அப்போது ஏற்பட்ட பாதிப்புக்களால் சில குடும்பங்களுக்கு இப்போது கூட வாழ்வாதாரத்தில் பலத்த அடி விழுந்துள்ளதை நாம் மறுக்க முடியாது.
அப்படி கிளிநொச்சி - முட்கொம்பன் பகுதியில் வசித்து வரும் இன்பசிறி றங்கன் (வயது 60) என்ற முதியவர் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக தனது காலை இழந்து நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போதும் முள்ளிவாய்க்காலில் காயமடைந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து தற்போது தமது சொந்த இடத்தில் மீள்குடியோறி வாழ்ந்து வருகிறார்.
இன்று முழு நாட்டையும் ஆட்டிப்படைக்கும் பொருளதார நெருக்கடி, தொழில்வாய்ப்பின்மை என்பன ஒரு சாதாரண மனிதனையே பெரிய அளவில் பாதித்துள்ள நிலையில் இவர் போன்ற பல குடும்பங்கள் நிம்மதியற்ற வாழ்வு வாழ்வதுடன் அன்றாட உணவுக்கு பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், “யுத்தத்தின் போது ஒவ்வொரு ஊராக இடம்பெயர்ந்து வந்த நிலையில் என்னை பதவியாறு முகாமில் விட்ட போது அங்கு கொட்டியா.. கொட்டியா.. கொட்டியா.. என தெரிவித்து உணவும் வழங்காமல் அங்கிருந்து விரட்டினார்கள். இந்த நிலையில் இப்போதும் உழைப்பில்லாமல் அப்போது பட்டதை விட பல துன்பங்களை எதிர்கொண்டே வாழ்ந்து வருகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.