முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் 27.11.2026இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் சரியாக 06.5மணிக்கு மணிஓசை எழுப்பப்பட்டதுடன் மாவீரர்களுக்கான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
பெருந்திரளான மாவீரர்கள்
அந்தவகையில் லெப்கேணல் முரளி, லெப்ரினன் நல்லரசன், லெப்ரினன் தமிழவன் ஆகிய மூன்று மாவீரர்களின் சகோதரியான அமலதாஸ் சர்மிளா பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மாவீரர்நாள் நினைவேந்தல் செயற்பாடுகள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் பெருந்திரளான மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






