முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் காணி பயன்பாட்டுக்குழு கூட்டம்
முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் காணிப்பயன்பாட்டுக்குழு கூட்டம் இன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் (29) நடைபெற்றுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் என்.ரஞ்சனா தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர் ம.தயானந்தன் மற்றும் காணிப்பகுதி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்பினை சேர்ந்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது மாந்தை கிழக்கு பிரதேச செயலக நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் குத்தகைக்கு வழங்கப்பட்ட அரசகாணிகள், மற்றும் உரிமை கோரப்படாத காணிகள் தொடர்பாகவும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
மாந்தை கிழக்கில் பல குடும்பங்கள் காணிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் காணி இல்லா மக்களுக்கு அரச காணியினை பகிர்ந்து அளிப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் வெளிமாவட்டத்தினை சேர்ந்த ஏனையவர்களுக்குக் காணிகளை வழங்கவேண்டும் என்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ம.தயானந்தன் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அரச காணிகள் குத்தகைக்கு வழங்குவதற்கு இந்தக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், நீண்ட விவாதத்தின் பின்னர் மாந்தை கிழக்கில் அரச காணிகள் குத்தகைக்கு வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.







ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
