நாட்டில் இருவேறு பகுதிகளில் விபத்து: இருவர் படுகாயம் (Photos)
நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல விபத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - நெடுங்கேணி வீதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்து சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளையில் இருந்து நெடுங்கேணி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசுகார் 7ஆம் கட்டைப்பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை வீதிப்போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்- மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் சந்தியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
மின்சாரம் தடைப்பட்டிருந்தவேளை நேற்று இரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லான்மாஸ்டர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த தம்பதிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புகையிலை ஏற்றி வந்த லான்மாஸ்டரை, சமிக்ஞை விளக்கு போடாமல் வீதியில் நிறுத்தி வைத்திருந்ததால் வீதியில் வந்த முச்சக்கர வண்டி மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த தம்பதிகள் படுகாயமடைந்ததால் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டிமூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லான்ட்மாஸ்டரானது பொறுப்பற்ற விதத்தில் வீதியில் நிறுத்தியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
