கடற்றொழில் உறுப்பினரின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட விவகாரம்: ரவிகரன் எம்.பி வழங்கியுள்ள உறுதி
சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றில் கொடுக்கவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தைக் கண்டித்து இன்றையதினம் (21) முல்லைத்தீவில் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கைகள்
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், குறிப்பாக கடற்றொழில் இளைஞர்கள் தற்போது ஒன்றுசேர்ந்து செயற்பட்டு வருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டகடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணையத்தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் என்பவருடைய மோட்டார் சைக்கிள் அண்மையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களால் திருடப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் உரியவர்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளபோதும், இதுவரை உரிய சட்டநடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
நாடாளுமன்ற அமர்வு
இந்தவிடயத்தில் பொலிஸார் சட்டம், ஒழுங்கினைப் பாதுகாக்கத் தவறியுள்ளதாகக் கருதுகின்றேன்.

ஜனாதிபதி தன்னுடைய தொடக்க உரையில் கூட சட்டம் ஒழுங்கு பாதுக்கப்படுமெனத் தெரிவித்திருந்தார். இந்த விடயத்தில் சட்டம் ஒழுங்கு காப்பற்றப்படாத காரணத்தினால், சட்டம் ஒழுங்கினை பாதுகாக்குமாறு கோரியே இங்கு மக்களோடு இணைந்து நாமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
எனவே சட்டம் ஒழுங்கினைப் பாதுகாக்க வேண்டியவர்கள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
எதிர்வரும் மே மாதம் 08, 09ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்விருக்கின்றது. அந்தவகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி செயலகம், பிரதமர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோரிடம் இந்த விடயத்தினைத் தெரியப்படுத்துவதுடன், நாடாளுமன்றத்திலும் இந்த விடயத்திற்கு குரல்கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 


 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
    
    மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        