தண்ணிமுறிப்பு குள மீன்பிடி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் (Photos)
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குளத்தின் மீன்பிடி தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் வெளி இடங்களிலிருந்து வந்து மீன் பிடித்தல், தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுதல் முதலான முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் நேரடியாக ஆய்வு செய்து குறித்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்ததோடு இந்த விடயம் சார்ந்து செயற்படுத்த அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்
(நிர்வாகம்), உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசனப்
பொறியியலாளர், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள், NAQDA நிறுவனத்தின்
உதவிப் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
