முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் போராட்டம் வெற்றி:அதிகாரிக்கு இடமாற்றம் -அ.அருள்நாதன் (Video)
”சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்த மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக” முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன தலைவர் அ.அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (13.10.22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த 03 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கடற்றொழிலாளர்களின் போராட்டம் 06 ஆம் திகதி பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக போராட்டத்தினை கைவிட்டுள்ளதுடன், பணிப்பாளர் நாயகத்தின் விசாரணைக்குழுவிடம் கடற்றொழிலாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளதுடன், 12 ஆம் திகதி சரியான முடிவு கிடைக்கப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா
அதற்கமை கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுமுன் தினம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை கட்டுப்பபடுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எங்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிகாரிகளை மாற்றம் செய்யவேண்டும் என கோரியுள்ளோம். முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிக்கு மாற்றம் கிடைத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு புதிதாக வரவுள்ள அதிகாரிக்கு ஆதரவாக நாங்கள் அனைவரும் ஒத்து நிற்போம்.
சட்டவிரோதமான தொழில் செய்வோரின் கோரிக்கை
சட்டவிரோதமான தொழில் செய்பவர்ளும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள். அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். அவர்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ள விடயம்,
சட்டவிரோதமான தொழில் செய்யமுடியாது, என்றும் 28 பேருக்கு இரண்டரை ஒன்றரை இஞ்சி வலை பாவித்து பகலில் தொழில் செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை விட சட்டவிரோமான தொழில் செய்தால் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சரின் இந்த விடயத்தினை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த விடயம் சரியாக நடைபெறுமாக இருந்தால் மேலும் அமைச்சருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
2023 ஆண்டாவது ஒட்டுமொத்தமாக சட்டவிரோத தொழில் இல்லாமல் செய்யவேண்டும்.
இடமாற்றம்
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிபாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மேலும் இரண்டு அரச உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
நாங்கள் வைத்த கோரிக்கைக்கு அமைய சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்த ஏனைய இரண்டு அதிகாரிகளையும் மாற்றம் செய்யவேண்டும் அதனையும் அமைச்சர் செய்து தருவாரென நம்புகின்றோம்.
இலங்கையில் இருக்கும் அனைத்து மாவட்ட சிறுபான்மை மக்களும் சட்டவிரோத தொழில் நடவடிக்கையினை எதிர்கின்றார்கள் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும்.
எங்கள் போராட்டம் வெற்றியளித்துள்ளது. இனிவரும் அதிகாரிகளுடன் கடற்றொழிலாளர் சமூகங்கள்
ஒன்றிணைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையினை இல்லாமல் செய்யவேண்டும். இல்லாமல்
செய்தால்தான் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதரம் மேற்கொள்ள முடியும்” என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
