முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியரை தாக்கிய பெண் ஊழியர் கைது
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட மருத்துவமனையில் பெண் ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்திய மற்றுமொரு பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (23.06.2024) இடம்பெற்றுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 30ஆம் திகதி அன்று இடம்பெற்றுள்ளதையடுத்து, தாக்குதலை மேற்கொண்ட பெண் ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை
மேலும், அவர் தலைமறைவாகியிருந்த நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் முள்ளியளை பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, இன்று குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 21 மணி நேரம் முன்

பாரிஜாதம் சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய தொடர்... திருமாங்கல்யம், முதல் புரொமோ Cineulagam

496 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த உலகின் அதிவேக கார்! ஜேர்மனியில் பறந்த காட்சிகள் வைரல் News Lankasri
