காதலியார் சம்மளங்குளத்தில் விவசாயப்பாதை சீரின்மையால் அவதியுறும் விவசாயிகள்

Sri Lankan Tamils Tamils Mullaitivu Government Of Sri Lanka Thurairajah Raviharan
By Shan Jul 20, 2025 06:10 PM GMT
Report

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, காதலியார் சம்மளம்குளம் பகுதியிலுள்ள வயல்நிலங்களுக்குச் செல்லும் 03 கிலோமீற்றர் தூரமான குருவிச்சை ஆற்றுப்பால வீதியானது சீரின்றி காணப்படுவதால் அப்பகுதி விவசாயிகள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி விவசாயிகளின் அழைப்பையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் (20) குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.

குறிப்பாக 03 கிலோமீற்றர் தூரமான இவ்வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு காணப்படுவதால், இப்பகுதியில் 300 ஏக்கர் வரையிலான விவசாயநிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் விவசாயத்திற்கான உள்ளீடுகளை எடுத்துச்செல்வதிலும், அறுவடைக்காலத்தில் அறுவடையை எடுத்துச்செல்வதிலும் பலத்த இடர்பாடுகளுக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்..!

யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்..!

மிகமோசமான சேதம் 

அத்தோடு குறித்த பகுதியில் அமைந்துள்ள குருவிச்சை ஆற்றுப்பாலமும் கடந்தகாலத்தில் மிகமோசமாக சேதமடைந்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வடக்குமாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் அவருடைய முயற்சியல் அந்தப்பாலம் புதிகாக அமைக்கப்பட்டிருந்தது.

காதலியார் சம்மளங்குளத்தில் விவசாயப்பாதை சீரின்மையால் அவதியுறும் விவசாயிகள் | Mullaitivu Farmers Issue Raviharan Mp

இந்நிலையில் அப்பாலத்தினைப் புதிதாக அமைத்துத் தந்ததைப்போல, அதனோடு இணைந்த 03 கிலோமீற்றர் தூரமான வீதியைும் சீரமைத்துத் தருமாறு விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த வீதிச் சீரமைப்புத் தொடர்பில் எழுத்துமூலமான கோரிக்கையினைத் தம்மிடம் கையளிக்குமாறும், தாம் இவ்வீதிச் சீரமைப்புத்தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த களவிஜயத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரனும் கலந்துகொண்டிருந்தார்.

கச்சத்தீவு இலங்கைக்குக் கிடைத்து விட்டது! தமிழக முதலமைச்சரின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதிலடி

கச்சத்தீவு இலங்கைக்குக் கிடைத்து விட்டது! தமிழக முதலமைச்சரின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதிலடி

ஐரோப்பாவில் விமானியாக கால்பதித்த ஈழத்தை சேர்ந்த இளைஞர்

ஐரோப்பாவில் விமானியாக கால்பதித்த ஈழத்தை சேர்ந்த இளைஞர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US