முல்லைத்தீவு இலங்கை வங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்மை: மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை
முல்லைத்தீவு நகரில் இயங்குகின்ற இலங்கை வங்கி கிளையில் மாற்றுத் திறனாளிகள் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வசதிகள் இன்றி காணப்படுகின்றமை தொடர்பில் வெளியான தகவல்களுக்கு அமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவிக்கையில்,
மாற்றுத்திறனாளிகள் தங்கு தடையின்றி அரச, அரசார்பற்ற மற்றும் பொது நிறுவனங்களில் சிரமம் இன்றி சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இது சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு சுற்று நிரூபம் மற்றும் உச்ச நீதி மன்றின் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தும் சில பொதுக் கட்டடங்களில் இன்றும் அவை இல்லாது இருக்கின்றது.
எனவே இது தொடர்பில் தங்களின் கவனத்திற்கு வருகின்ற விடயங்களை நாம் எமது
சொந்த பிரேரணையாக ஏற்று உரிய நடவடிக்கையினை மேற்கொள்வோம்'' இவ்வாறு கூறியுள்ளார்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
