முல்லைத்தீவில் பெருச்சிலைகள் நிறைந்த ஆண்டான்குளம் ஆதி ஐயன் கோவில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆண்டான்குளத்தில் உள்ள ஆதி ஐயன் கோவில் பெரும் சிலைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.தமிழர்களின் பழம் பெரும் ஆலயமாகவும் இது விளங்குகின்றது.
தமிழர்களின் வழிபாட்டியலில் ஐயன் வழிபாடும் முதன்மையானது மட்டுமன்றி வழிபாட்டு முறைகளிலும் சம்பிர்தாயங்கள் அதிகம் நிறைந்ததாகவும் உள்ளது.
ஆண்டான்குளம் ஆதி ஐயன் கோவில் ஆண்டான்குளம் பாதுகாக்கப்பட்ட வனத்தின் எல்லையில் அமைந்துள்ளது.காட்டோரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஆண்டான்குள மக்களின் குல தெய்வமாகவும் இருக்கின்றது.
ஆண்டான் குளத்தில் உள்ள ஒருயொரு ஆலயமாகவும் இது விளங்குகின்றது.
பெரிய சிலைகள்
ஐயனாரின் பெரிய சிலை ஆலய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.கையில் வாளுடனும் கதாயுதத்துடனும் இருப்பதாக அந்தச் சிலை அமைந்துள்ளது.

பெரிய குதிரைச் சிலையும் யானைச் சிலையும் அதன் மீது அமர்ந்துள்ள கடவுள் சிலைகளுமாக ஆலயத்தினுள் செல்லும் போது பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.
மற்றொரு காவல் தெய்வத்தின் சிலையும் ஆலய வளாகத்தில் உள்ளது.கிராமிய வழிபாட்டு முறையை கொண்டுள்ள இந்த ஆலயத்தில் ஆகம முறையிலான பூசைகளும் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தின் கருவூலம்
ஆண்டான்குளம் ஆதி ஐயனார் கோவில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆலய திருப்பணிகளில் பொதுமக்களின் பங்கெடுத்தல்கள் இருப்பதனையும் புனரமைப்புப் பணிகள் கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றன.
ஆலயத்தின் கருவூலம் புதிய வடிவமைப்போடு புனரமைக்கப்பட்டு வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
விபத்து ஏற்பட்டு பரிதாப நிலைமையில் இருக்கும் தமிழ், அடுத்து என்ன... சின்ன மருமகள் சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam