மாற்றுத்திறனாளி ஒருவரின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் A9 வீதியில் ஆண் மாற்றுத்திறனாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வாந்தி எடுத்துள்ள நிலையில் 1990 இலக்க நோயாளர் காவு வண்டியில் ஏற்ற அழைத்த போது அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் மட்டக்களப்பு, களவாஞ்சிக்குடி பகுதியை சேர்ந்த 1 பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை வாகனம் ஒன்றில் ஏற்றி வைத்தியசாலைக்கு
கொண்டு சென்றுள்ளனர்.
