முல்லைத்தீவு பகுதியில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் (Photo)
முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் உள்ள வீட்டு சமையல் அறையில் பாத்திரம் ஒன்றில் பெருமளவிலான துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கி ரவைகள் இன்று(24) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கேப்பாபிலவு பகுதியில் நீண்டகாலமாக படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் இந்திராணி என்பரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை
இதனை யார் கொண்டு வந்து வைத்திருப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் அனைத்தும் புதியவையென தெரியவந்துள்ளது.
மேலும் கேப்பாபிலவு படை முகாமிற்கு முன்னால் உள்ள இந்திராணி என்பரின் வீடு மற்றும் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள போதும் மற்றுமொரு இவர்களின் பூர்வீக காணியை படையினர் ஆக்கிரமித்துள்ளனர்.
கணிகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
அந்த காணியில் இருக்கும் வளங்கள் படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த காலங்களில் தங்களின் காணிக்காக போராடி வந்த இவர்கள் இன்றும் தங்கள் சொந்த காணிகளில் இருக்கம் படையினரை வெளியேற்றி தங்கள் காணிகளை மீட்டுத்தருமாறு இந்திராணி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
