முல்லைத்தீவு மனித எச்சங்கள் விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 திகதி அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எச்சங்களை அழிவடையாமால் பாதுகாக்க நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழ்வு பணி

இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து கொக்கிளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இது தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதற்கமைய மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் ஜூலை 6 திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு, அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும், அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri