பல அமைச்சர்களுக்கு எதிராக பொய்யான தகவல்கள்! முஜிபுர் ரகுமான் குற்றச்சாட்டு (Video)
எங்களுடைய அரசாங்கத்தில் இருந்த பல அமைச்சர்களுக்கு எதிராக பொய்யான தகவல்கள், பொய்யான விடயங்கள் இந்த நாட்டிலே பெரும்பாண்மை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது எல்லோருக்கும் தெரியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிற்று தாக்குதலில் அமைச்சர்கள் ரிசாட் பதியுதீன், அசாத் சாலிக்கு மற்றும் சட்டதரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு தொடர்பு இருகிறது என்று, அப்படி பல நபர்களை இவர்கள் தாக்கினார்கள் குண்டு வெடிப்புக்கு இவர்கள் தான் காரணம் என்றார்கள்.
இதை முன்வைத்துதான் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தையும் உருவாக்கினார்கள். இப்போது இவர்களுடைய அரசாங்கத்தை உருவாக்கி இவர்கள் இப்போது ஆட்சிக்கு வந்து பல வழக்கு தாக்குதல் செய்துள்ளார்கள்.
இந்த நபர்களுக்கு எதிராக ஆனால் எங்களுக்கு தெரியும் நீதிமன்றத்தில் இருந்து இவர்கள் வழக்கு தாக்குதல் செய்த எல்லோருக்கும் நீதிமன்றம் மூலமாக அவர்களுக்கு பிணை கிடைத்திருக்கின்றது.
அப்படி பிணை கிடைத்திருப்பதற்கு காரணம் என்னவென்றால் இவர்கள் கூறிய விடயங்கள் ஒன்றும் நீதிமன்றம் முன்னால் அது உண்மை என்ற நிரூபிக்க முடியாத நிலைமைதான் இப்போது இருக்கின்றது. அதனால்தான் நீதிமன்றம் இப்போது இந்த நபர்களுக்கு பிணை வழங்கியுள்ளது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.