கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு - சபையில் அம்பலம்
கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் (09.05.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
குறித்த மாணவி தொடர்பான விவகாரம் நீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
நீதியான விசாரணை
இதன்போது கருத்து வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான், இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை என்றும் சாடியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு 7, 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்கு இடப்படுவார்களா?
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
