ஆளுங்கட்சி சட்டத்தை மதித்து நடக்க கற்றுக் கொள்ள வேண்டும்! முஜிபுர் ரஹ்மான்
ஆளுங்கட்சியினர் முதலில் சட்டத்தை மதித்து நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான் எம்.பி, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் சட்டத்தில் தெளிவான விளக்கங்கள் உள்ளன.
ஆட்சியமைக்கும் சபைகள்
அவ்வாறான நிலையில், உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையை தேடிக் கொள்வதற்கு முன்னதாக அரசாங்கம் அதனை தெளிவாக வாசித்துப் பார்க்க வேண்டும்.
அரசாங்கம் பெரும்பான்மையை பெற்றுள்ள சபைகளில் அவர்கள் ஆட்சியமைக்க நாங்கள் தடையாக இருக்க மாட்டோம். நாங்கள் ஆட்சியமைக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ள சபைகளில் அவர்கள் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது.
அதைவிடுத்து யாரும் யாருக்கும் முட்டுக்கட்டை போடவோ, தடைகள் போடவோ வழியில்லாத நிலையில் சட்டத்தில் எல்லாம் தெளிவாக உள்ளது.
ஆளுங்கட்சி முதலில் அதனைப் படித்து சட்டத்தை மதித்து நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
