இனவாதத்தை விதைக்க சிலர் முயற்சிக்கின்றனர்
சில தரப்பினர் மீண்டும் நாட்டில் இனவாதத்தை விதைக்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நபர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அவர் இந்த விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்களில் முரண்பாடு காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் உதய கம்மன்பில புத்தகம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து அடைந்துள்ள சில அரசியல்வாதிகள் மீண்டும் இனவாதத்தை கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என உதய கம்மன்பில, சஹ்ரான் ஹசீமையும், சரத் வீரசேகர நௌபர் என்ற நபரையும் சுரேஷ் சாலே வேறு ஒருவரையும் குற்றம் சுமத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மூவரும் கோட்டாபயவிற்கு நெருக்கமானவர்கள் என்ற நிலையில் மூவரும் இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என மூன்று வெவ்வேறு நபர்களை பெயரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களை அரசாங்கம் பகிரங்கமாக விசாரணை செய்யத் தவறியதனால் ஒவ்வொருவரும் தங்களது ஊகங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை பெயரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வெளிப்படையாக விசாரணை நடத்தினால் இனவாதிகளின் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri