சமூக வலைத்தளங்களில் சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுப்பட்டவர் கைது
சமூக வலைத்தளங்களில் சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் தீங்கிழைக்கும் வகையில் இந்த அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாணந்துறையில் நேற்று (10.2.2024) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சேறு பூசும் நடவடிக்கை
எதிர்காலத்தில் அவ்வாறான நபர்களின் பெயர்கள் வெளியிடப்படும். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கையில் 400,000 ரூபா பணம் இருந்தது. அவ்வாறானவர்கள் இந்த சமூக வலைதளத்தை பயன்படுத்தி எங்களை அவதூறாக பேசுபவர்களாகும்.

அரசியல்வாதி ஒருவர் தான் பணத்தை கொடுத்துள்ளார். அவர் காரில் சென்று பண பெட்டியை மாற்றியுள்ளார்.
டொலர்கள் மற்றும் கையில் பணம் இருந்த போது கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் எங்களை,அரசாங்கத்தை, பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவர் மீதும் சேறு பூசும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றனர்.

அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி
இதனால் தான் இந்த ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளோம்.
அரசாங்கங்களை கவிழ்க்க வேண்டுமானாலும் இந்த சமூக ஊடகங்கள் சேறு பூசுகின்றன. நான் இன்று சொல்கிறேன் இந்த சட்டமூலத்தை தவறாக கையாளுபவர்கள் மட்டுமே அது பிரச்சினையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        