சர்ச்சையில் சிக்கியுள்ள எம்.எஸ்.தோனி: சமூக ஊடங்களில் விவாதம் - செய்திகளின் தொகுப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசிய பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் ஜி20 மாநாட்டு அழைப்பிதழிலும் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பாஜக தலைவர்கள், தொண்டர்கள் 'பாரத்' என்ற பெயருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், பிற கட்சியினர், தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எம்.எஸ்.தோனியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
இதற்கு காரணம் அதில் தேசியக் கொடியுடன் I am blessed to be a Bharatiya என உள்ளது தான். இதன் வாயிலாக தோனி மத்திய அரசின் பெயர் மாற்றத்திற்கு ஆதரவு அளிக்கிறார் என்று சமூக ஊடங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தியுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு