முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட தயாராகும் ஐ. மக்கள் சக்தியின் எம்.பிக்கள்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அனைத்து மாகாணங்களுக்குமான முதலமைச்சர் வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களை நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு அமைய வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட நளின் பண்டாரவும்(Nalin Bandara), மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட மயந்த திஸாநாயக்க(Mayantha Dissanayakke) இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியான கூட்டணியாக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுமாயின் தான் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதாக தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
