மக்களுக்காக கோவிட் தடுப்பூசியை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு தமக்கு கோவிட் தடுப்பூசியை ஏற்ற வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த விடயம் பற்றிய அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளது.
இராணுவ மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் ஏற்றப்பட உள்ளது.
முன்னரங்க சுகாதாரப் பணியாளர்கள், ஆபத்துக்களை எதிர்நோக்கி வரும் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுகையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
I have decided not to take the Covid vaccine now. Our priority should be vaccinating most vulnerable groups and frontline workers. I will take it after at least 1 million people have been vaccinated.
— Harin Fernando (@fernandoharin) February 16, 2021
அத்துடன் நாட்டில் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னரே தாம் தடுப்பூசியை போட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
