மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிப்புற்ற மக்களை பார்வையிட்ட சிறிநாத் எம்.பி
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் ஆனைகட்டியவெளி பிரதான வீதி உடைப்பெடுத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொணாகல்ல பகுதியிலிருந்து வெளியேறும் நீர் ஆனைகட்டியவெளி, வேத்துச்சேனைப் பிரதேசங்களினூடாக வெளியேறிச் செல்வதனால் அவ்வீதி உடைப்பெடுத்ததையடுத்து அவ்வீதியுடனான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
பாதிப்பு நிலவரம்
இந்தவிடயம் குறித்து அறிந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அப்பகுதிக்கு நேற்றையதினம்(03.12.2025) விஜயம் செய்து நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார்.
அங்கிருந்தபடியே நாடாளுமன்ற உறுப்பினர் வீதி அபிவிருத்தி மாட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த வீதியின் புனரமைப்பு தொடர்பில் எடுத்துரைத்ததற்கு இணங்க இவ்வீதி புனரமைப்பு நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு நிலவரம் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டு அப்பகுதி மக்களிடமும் கேட்டறிந்து கொண்டுள்ளார் .





ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam