13 ஆவது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொள்வதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சித்தார்த்தன் வலியுறுத்து
13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (24.03.2024) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் இருக்கின்றது. அது போதும் எனக் கூறவில்லை. எனினும் அதை ஏற்றுக்கொள்வதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
எங்களுக்குள் பலர் அதை மறுக்கின்ற தன்மை இருந்தாலும் கூட இந்த 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து வருகின்ற அரசுகள் எல்லாம் எவ்வளவு பின்னடிக்கின்றது என்பதை கண்கூடாக காண்கின்றோம்.
இந்த நிலையில் இதை விட நாம் பெரிதாக பெறுவோம் என்று கூறி படிப்படியாக எங்களுடைய இனம், அதாவது வடக்கு - கிழக்கு தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்து கொண்டு வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |