வெலிக்கடைப் படுகொலை குறித்தும் விசாரணை வேண்டும்! நாடாளுமன்றில் செல்வம் எம்பி. வலியுறுத்து
தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
வெலிக்கடைச் சிறைச்சாலை
"வெலிக்கடைச் சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டே தோழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதை அறிய முடியாமல் உள்ளது.
எனவே, கடந்தகால கொலைகள் பற்றி விசாரிக்கும் இந்த அரசு, வெலிக்கடைப் படுகொலை பற்றியும் விசாரிக்க வேண்டும்.
ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்திலேயே இந்தச் ம்பவம் இடம்பெற்றது." - என்றும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
