“வடக்கில் சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கொழும்பில் தேர் வலம் வந்தது” - இது சிங்கள பௌத்த நாடு என்கிறார் சரத் வீரசேகர
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை அன்றும் கூறினேன். இன்றும் கூறுகின்றேன், என்றும் கூறுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டில் சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் தான் வாழ வேண்டும் என நான் எப்போதும் கூறவுமில்லை. கூறப் போவதுமில்லை.
ஏனைய இனங்களை புறக்கணிக்கும் நோக்கம் அல்ல
சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால்தான் தெற்கில் உள்ள 52 சதவீதமான தமிழர்கள் கௌரவமான முறையில் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்கின்றார்கள்.
வடக்கில் சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கொழும்பில் தேர் வலம் வந்தது.
சிங்களவர்கள் இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தவர்களாக உள்ளார்கள். ஆனால் தமிழ் - முஸ்லிம் சமூகத்தினர் தங்க வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். சிங்களவர்கள் அவற்றை கொள்வனவு செய்கிறார்கள்.
கொழும்பில் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை. இதன் காரணமாகவே இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றேனே தவிர ஏனைய இனத்தை புறக்கணிக்கும் நோக்கத்தில் அல்ல என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
