விசேட நடாளுமன்ற குழுத் தலைவராக சாகர காரியவசம் நியமனம் : வெடித்துள்ள சர்ச்சை
நாட்டின் நிதி வங்குரோத்து நிலை குறித்து ஆராய்வதற்காக விசேட நடாளுமன்ற குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை இன்று (06.07.2023) காலை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
நியமனத்திற்கு எதிர்ப்பு
காரியவசத்தின் நியமனத்திற்கு எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், நாட்டின் திவால் நிலைக்கான காரணத்தை ஆராய ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரைப் நியமித்தமையை நம்பமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிரியெல்லவின் இந்த கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தனது கவலையை வெளியிட்டதுடன், இலங்கையின் இன்றைய நிலைக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
