பிரித்தானியாவில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்த ரூபர்ட் லோ எம்.பி
பிரித்தானியாவின் கிரேட் யர்மவுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரூபர்ட் லோ, ரீஸ்டோர் பிரிட்டன்' என்ற புதிய தேசிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.
முன்னதாக 'ரீஃபார்ம் யூகே' (Reform UK) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, இதனை ஒரு அரசியல் இயக்கமாகத் தொடங்கிய அவர், தற்போது அதனை ஒரு முழுமையான கட்சியாக மாற்றியுள்ளார்.
இக்கட்சியானது ஒரு 'குடை அமைப்பு' போலச் செயல்படும் என்றும், உள்ளூர் அளவிலான சிறிய கட்சிகளுடன் இணைந்து தேசிய அளவில் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்தல்
குறிப்பாக, சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் பாரம்பரியக் கிறிஸ்தவ விழுமியங்களைப் பாதுகாப்பது போன்ற தீவிர நிலைப்பாடுகளை இக்கட்சி முன்வைக்கின்றது.
முன்னதாக, ரூபர்ட் லோ மீது சுமத்தப்பட்ட வன்முறை மிரட்டல் முறைப்பாடுகள் காரணமாக அவர் ரீஃபார்ம் யூகே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இருப்பினும் ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

தற்போது சுயேச்சை எம்.பியாக இருக்கும் இவர், அடுத்த பொதுத்தேர்தலில் தனது சொந்த தொகுதியான கிரேட் யர்மவுத்தில் 'கிரேட் யர்மவுத் ஃபர்ஸ்ட்' (Great Yarmouth First) என்ற உள்ளூர் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.
ரூபர்ட் லோவின் இந்த புதிய முயற்சி, பிரித்தானியாவின் வலதுசாரி அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.