கல்வி அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அமைச்சருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
நாடாளுமன்ற அமர்வுகளின் போது மிகவும் இழிவான வார்தைகளை பயன்படுத்தி தம்மை அவதூறு செய்ததாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகவும் ஒர் தாயாகவும், பெண்ணாகவும் தமக்கு இதனால் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களின் மூலம் நாடாளுமன்றம் தொடர்பில் மக்களின் நன்மதிப்பு பாதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கடிதத்தில் கோரியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
