எங்கள் அரசு நீதித்துறையை சரியான முறையில் கட்டமைக்கும் - கந்தசாமி பிரபு எம் பி
எதிர்க்கட்சியினர் என்ன குழப்பம் செய்தாலும் நீதித்துறை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
நேற்று (31.07.2026) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி
அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தக் கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 10, 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த மாதம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மயிலத்தமடு மாதவனை காணி தொடர்பில் ஆராயந்துள்ளோம். அந்த காணிகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும்.

அத்துடன் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற யானை - மனித மோதலை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள யானை வேலி தொடர்பாகவும் வாழைச்சேனை கடதாசி ஆலையில் இருக்கும் தண்ணீர் தாங்கி அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பு தொடர்பாக கடந்த கால ஆட்சியாளர்கள் எதிர்மறையான சிந்தனையில் செயற்பட்டு வருகின்றனர்.
இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்
கூட்டு சேர்ந்த எதிர்க்கட்சி
இப்போது இருக்கின்ற எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த வயதெல்லை அதிகரிப்பில் மாறுபாடான கருத்துக்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.
உதாரணமாக சாரை பாம்புக்கு மண்ணெண்னை ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல பதறியடித்துக் கொண்டு திரிவதை பார்கக்கூடியதாக உள்ளது.

கூட்டு சேர மாட்டோம் என்றவர்கள் இன்று கூட்டு சேர்ந்து கொண்டு இந்த வயதெல்லை அதிகரிப்பதை எதிர்க்கின்ற நிலை உருவாகியுள்ளது.
இவர்களின் நோக்கம் மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து தாங்களை விடுவித்து கொள்வதே ஆகும்.
எதிர்க்கட்சியினர் என்ன குழப்பம் செய்தாலும் நீதித்துறை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri