எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: ஹர்ஷவிற்கு ஏற்பட்டுள்ள நிலை
எதிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மோட்டார் சைக்கிளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு காரணமாக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மோட்டார் சைக்கிளில் பயணிப்பதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை நீடித்தால் எதிர்வரும் நாட்களில் சைக்கிளில் பயணிக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார நிபுணரினால் கூட இந்த எரிபொருள் விலை ஏற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாளுக்குகு நாள் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தங்களும் இவ்வாறு மோட்டார் சைக்கிளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் இந்த கருத்துக்களை வெளியிட்ட போது, ஹர்ஷ அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் அமர்ந்து அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.