சிவில் உடையில் உலாவும் புலனாய்வாளர்கள்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கடும் கண்டனம்(Video)
நாடாளுமன்ற உறுப்பனர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சொந்த மக்கள் மத்தியில், சொந்த ஊரான யாழ். மண்ணில் வைத்து தாக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கியால் மிரட்டப்பட்டுள்ளார். இதனை வண்மையாக கண்டிக்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தந்தையார் குமார் பொன்னம்பலம் அவர்களும் கொழும்பில் வைத்து பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதற்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ் உள்ளிட்டோரும் சிவில் உடையில் வந்தவர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
எனவே சிவில் உடையில் வருபவர்களை சந்தேகிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவேதான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அங்கு வந்த சிவில் புலனாய்வாளர்களை துருவி ஆராய்ந்திருக்கின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
விவாகரத்து வழக்கில் ரோஹினியை சிக்க வைக்க மனோஜிற்கு கிடைத்த வீடியோ, ஆனால்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam