சுவிட்சர்லாந்து செல்லும் கஜேந்திரகுமார் எம்.பி!
சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.
2025இல் இலங்கை சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை சுவிட்சர்லாந்து 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக
தூதரகம் விடுத்த அழைப்பில் இலங்கை புதிய அரசியலமைப்பு மாற்றம் நிகழ உள்ள நிலையில் இலங்கை அரசியல்வாதிகள் சுவிஸ் அரசியல் அமைப்பு பற்றிய ஆழமான, நேரடி நுண்ணறிவுகளைப் பெறவும், அர்த்தமுள்ள பரிமாற்றங்களில் ஈடுபடவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என தூதரக அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சுமார் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில், குறித்த மாநாட்டில் ஒரே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒருபுறம் கிம் - ட்ரம்ப் சந்திப்பு... மறுபுறம் வடகொரியாவில் ஊடுருவிய அமெரிக்க சிறப்புப்படை: திகில் பின்னணி News Lankasri
