தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
நான் நாடு திரும்பியதும் கைது செய்யப்படலாம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டிற்கு தனிப்பட்ட பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்த அவர், அங்கு ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது அவர் அங்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தமைக்காக நான் நாடு திரும்பியதுமே கைது செய்யப்படலாம் என கூறியிருந்தார்.
சர்ச்சைக்குரிய உரை..
விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகளை நியாயப்படுத்தி பேசிய சர்ச்சைக்குரிய உரையைத் தொடர்ந்தே, தாம் மீண்டும் இலங்கைக்கு திரும்பும்போது கைது செய்யப்படலாம் என சுட்டிக்காட்டியிருந்தார்.

”இலங்கைக்கு சென்றடைந்ததும் நான் கட்டாயமாகக் கைது செய்யப்படுவேன் என எதிர்பார்க்கின்றேன், தனது உரையின் உள்ளடக்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் குறித்த எனது கருத்துக்கள் காரணமாக, இலங்கைச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் இன்று நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராமநாதன் அர்ச்சுனா, தனது இந்த தனிப்பட்ட பயணத்தின் போது, தமிழக அரசின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனையும் சந்தித்திருந்தார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan