வத்தளையில் பாரவூர்தி மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு!
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடகஹபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றுமுன்தினம்(8.3.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ராகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
மேற்படி நபர் தனது மோட்டார் சைக்கிளில் குடகஹபிட்டிய சந்தி ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த போது, அவருக்குப் பின்னால் வந்த மிக்சர் ரக பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri